பக்தி பெயரில் விபரீதம்..! நெஞ்சில் மண்பாண்டம்… 9 நாள் நவராத்திரி விரதம்… கடைசியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்…!!

By Gayathri on ஐப்பசி 26, 2026

Spread the love

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், நவராத்திரி வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கடுமையான சடங்கு முறையைப் பின்பற்றியுள்ளார். ஒன்பது தினங்கள் தொடர்ச்சியாகத் தனது நெஞ்சின் மீது மண்பாண்டத்தை வைத்துக்கொண்டு, அசையாமல் படுத்த படுக்கையாக விரதமிருந்த இந்த வினோத நேர்த்திக்கடன் அப்பகுதியில் கவனத்தை ஈர்த்திருந்தது.

ஒன்பது நாள் சடங்குகள் முடிந்து வீட்டிற்குத் திரும்பிய சிறிது நேரத்திலேயே அவருக்குக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

   

தொடர்ந்து பல நாட்கள் எவ்வித அசைவுமின்றி ஒரே நிலையில் படுத்திருந்ததும், கடுமையான நீரிழப்பு மற்றும் முந்தைய இதயக் கோளாறுகளுமே இந்நிலைக்கு வழிவகுத்திருக்கக் கூடும் என மருத்துவர்கள் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது. பக்தி என்ற பெயரில் உடலைத் தீவிரமாக வருத்திக் கொண்டு உணவும் நீருமின்றி மேற்கொள்ளப்படும் ஆபத்தான முறைகள் உயிருக்கே உலை வைத்துவிடும் என்பதை இச்சம்பவம் எச்சரிக்கிறது.