காலாவதியான நூலக புத்தகம், காலக்கெடுவுக்குப் பின்னால் 82 ஆண்டுகள் கழித்து சான் அன்டோனியோ பொது நூலகத்திற்குத் திரும்ப கிடைத்துள்ளது. பிரான்சிஸ் புரூஸ் ஸ்ட்ரெய்ன் எழுதிய “உங்கள் குழந்தை, அவரது குடும்பம் மற்றும் நண்பர்கள்(Your child, his family and friends) என்ற புத்தகம், ஜூலை 1943லில் சரிபார்க்கப்பட்டு, 28 நாட்களுக்குப் பிறகு திரும்பி அனுப்பப்பட வேண்டுமென கொடுக்கப்பட்ட புத்தகம், ஜூன் 2025-ல் ஓரிகானிலிருந்து ஒரு கடிதத்துடன் நூலகத்தை வந்தடைந்தது.
அந்த கடிதத்தில், “தங்கள் தந்தை இறந்த பிறகு, அவரது உடைமைகளில் இந்த புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டது. சான் அன்டோனியோ பொது நூலகத்திலிருந்து (SAPL) இந்த புத்தகம் வந்திருப்பதை கவனித்த போது, அதை உங்களுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்தேன். மேலும் தனது தந்தைக்கு 11 வயதாக இருந்த பொழுது, மெக்சிகோ நகரத்தில் உள்ள அமெரிக்க தூரகத்தில் வேலைக்கு மாற்றப்படுவதற்கு முன்பாக, தங்கள் பாட்டி அந்த புத்தகத்தை தன்னுடன் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். சுமார் 82 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அந்த புத்தகம் என் வசம் வந்தது. மேலும் இதற்கு தாமத கட்டணம் எதுவும் இருக்காது என்று நம்புகிறேன். ஏனெனில் இதற்குமேல் எனது பாட்டியால் அதற்கு பணம் செலுத்த முடியாது” என்று அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
சான் அன்டோனியோ பொது நூலகம் (SAPL), காலதாமதமான புத்தகங்களுக்கு தாமத கட்டணம் வசூலிப்பது இல்லை. 2021 ஆம் ஆண்டில், காலதாமத அபராதங்களை நீக்கியது. இதற்கு அபதாரம் விதிக்கப்பட்டிருந்தால், ₹. 78,802 ஆகியிருக்கும் என SAPL தெரிவித்தது. இந்த புத்தகம் பெறப்பட்ட ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, மத்திய நூலகத்தின் லாபியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…