அந்த சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது சிம்பு தானா?.. அட இப்படி ஒரு வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே.. எந்த படம் தெரியுமா..?

By Nanthini on ஆடி 6, 2025

Spread the love

சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் லெவன். இதில் இரட்டியர்களை வைத்து படத்தை இயக்குனர் மிரட்டி இருப்பார். இதில் நடித்த இரட்டையர்களுமே அனைவருமே நிஜ இரட்டையர்கள் என்பது மேலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது. இந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் அஜீல்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த பேட்டியில் levan படத்தின் கதாநாயகனாக நடிகர் சிம்பு அவர்களை தேர்வு செய்து வைத்திருந்ததாகவும் சிம்புக்காக தான் அந்த பெஞ்சமின் கதையை எழுதினேன் என்றும் கூறியுள்ளார்.

சிம்புவுக்கு உருவாக்கப்பட்டது தான் "லெவன்” படம்.. ஆனால் இதனால் தான் நடிகர்  மாற்றம்! ஓபனாக பேசிய இயக்குனர் | Leven Director Reveals He Originally Wrote  the Film for ...

   

இந்தப் படத்தில் அவர் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன் என அவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் சிம்புவை அவரால் அணுக முடியாததால் அந்த படத்தில் நவீன் சந்திராவை நடிக்க வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது இந்தச் செய்தி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ஒருவேளை இந்த படத்தில் சிம்பு நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு தங்கள் கமாண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.