நீயா? நானா.? பாமகவில் முற்றும் மோதல்…! அன்புமணி நீக்கம்..? தேர்தல் ஆணையத்துக்கு பறந்த கடிதம்..!!

By Soundarya on ஆடி 10, 2025

Spread the love

பாமகவில் தந்தை மகனுக்கு இடையே நீடித்துவரும்  மோதலால், தலைவர் பதவி மட்டுமின்றி, கட்சியில் இருந்தே அன்புமணியை நீக்குவதற்குராமதாஸ் ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   பாமக தலைவராக அன்புமணியின் பதவி மே 28 உடன் முடிவடைந்ததால், 29இல் ராமதாஸ் பாமக தலைவராக பொறுப்பேற்றார். இதனால் பாமக முழுவதையும் ராமதாஸ் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கத்தில், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் செல்லாது என்று தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது அன்புமணி தரப்பு. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என்றும் மின்னஞ்சலில் முறையீடு செய்துள்ளது.