ஹார்ட் அட்டாக் மொமெண்ட்… “சுற்றுலாப் பயணிகளை நட்டநடு வழியில் சிறைபிடித்த சிறுத்தை… பாதையை மறித்துப் படுத்துக் கொண்டதால்… ஸ்தம்பித்த வாகனங்கள்…!”

By Swetha on ஆனி 30, 2026

Spread the love

மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற சவாரி பாதையின் நடுவே சிறுத்தை ஒன்று படுத்துக்கொண்டு, அசால்ட்டாக உடலை நெளித்து ஓய்வெடுத்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. குனோ பூங்கா பொதுவாக சிறுத்தைகளுக்கான மறுஅறிமுகத் திட்டத்திற்குப் பெயர் பெற்றது என்றாலும், அங்கு இந்தியச் சிறுத்தைகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. அவ்வாறு வந்த ஒரு சிறுத்தை தான் சாலையை மறித்துப் படுத்துக் கொண்டது.

அந்தச் சிறுத்தை சாலையின் குறுக்கே எந்தவித பயமுமின்றி மிகவும் நிதானமாகப் படுத்து, அடிக்கடி தன் பக்கங்களை மாற்றிப் புரண்டு படுத்துக் கொண்டிருந்தது. இதனால் அந்தப் பாதையில் வந்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தச் சிறுத்தை அங்கிருந்து நகர மறுத்ததால், சவாரி முற்றிலும் ஸ்தம்பித்தது.

   

வழக்கமாக விலங்குகளைக் கண்டால் அச்சப்படும் சூழலுக்கு மத்தியில், இந்த அபூர்வக் காட்சியைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் பெரும் உற்சாகமடைந்தனர். வாகனங்களுக்கு மிக அருகில் சிறுத்தை ஓய்வெடுக்கும் இந்த அரிய காட்சியைத் தங்கள் கேமராக்களிலும், மொபைல் போன்களிலும் வீடியோவாகப் பதிவு செய்து மகிழ்ந்தனர். நீண்ட நேர ஓய்விற்குப் பிறகு, அந்தச் சிறுத்தை கம்பீரமாக எழுந்து தானாகவே அருகில் இருந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றது, அதன்பின்னரே சவாரி வாகனங்கள் மீண்டும் புறப்பட்டுச் சென்றன.