Connect with us

CINEMA

இதுதான் ராஜ விருந்தோ..? ‘லியோ’ தயாரிப்பாளர் லலித் மகன் திருமண வரவேற்பு… ‘விஜய் முதல் விக்கி’ வரை கலந்து கொண்ட பிரபலங்கள்…  

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் லலித் குமார். இவர்  7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத் தலைவராக உள்ளார். தன்னுடைய செவன் ஸ்கிரீன் நிறுவனத்தின் மூலம், காத்து வாக்குல ரெண்டு காதல், கோப்ரா, மகான், உள்ளிட்ட பல பிரமாண்ட படங்களை தயாரித்துள்ளார்.  இவர் நடிகர் விஜயின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தை தயாரித்திருந்தார். திரிஷா, கௌதம் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி, சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.  இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களையும் தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் லலித் குமாரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் தளபதி விஜய் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

நடிகர் விஜய் மட்டுமின்றி அனிருத், விக்னேஷ் சிவன், விஜயின் தந்தை எஸ்.ஏ.சி, உதயநிதி ஸ்டாலின்  உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் உணவை வழங்கும் ஏற்பாட்டை மதம்பட்டி ரங்கராஜ் ஏற்று சிறப்பாக முடித்து கொடுத்துள்ளார். மேலும் இந்த விழாவில் பல்வேறு உணவு வகைகள் வழங்கப்பட்டுள்ளது. வந்திருந்த அனைத்து பிரபலங்களும்  ரசித்து ருசித்து சாப்பிட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top