Connect with us

CINEMA

கடல், யான் படத்தில் செம்ம ஸ்லிம் ஃபிட்டாக பார்த்த.. நடிகை ராதாவின் இரண்டாவது மகளா  இது…? இப்படி மாறிட்டாங்களே…

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நாயகிகளில் ஒருவர் நடிகை ராதா. இந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த கமல் மற்றும் ரஜினி உடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடித்து பிரபல நடிகை ஆக வலம் வந்தார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின்  ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

  

   

இதை தொடர்ந்து 1991ல்  ராஜசேகரன் என்பவர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் கார்த்திகா ஜீவா உடன் ‘கோ’ படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு கதை தேர்வில் சொதப்பி சிறந்த கதைகளை தேர்வு செய்யாமல் சினிமாவில் இருந்து விலகினார்.

இவரை தொடர்ந்து இளைய மகள் துளசி 14 வயதிலேயே மணிரத்தினம் இயக்கிய  ‘கடல்’ படத்தில் அறிமுகமானார் அதன் பிறகு ஜீவாவுடன் ‘யான்’ படத்தில் நடித்தார். இந்த படமும் தோல்வியடைந்ததால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு, படிக்க சென்று விட்டார். சமீபகாலமாகவே இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அதில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக காணப்பட்டார்.

இந்நிலையில் தனது அக்கா கார்த்திகாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது நடிகை கார்த்திகா நாயருக்கு சில தினங்களுக்கு முன்னர்  ரோஹித் மேனன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல்வேறு திரைபிரபலங்களும்  கலந்துகொண்டனர். இந்த திருமண விழாவில் கார்த்திகாவின் தங்கையான துளசியும் பங்கேற்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Flash Talks (@flashtalks.media)

Continue Reading

More in CINEMA

To Top