நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் உலகம் முழுவதும் தோராயமாக ஜெயிலர் படம் 375 கோடியே 40 லட்சம் ரூபாய் வசூலித்தது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே பல்வேறு எதிர்ப்புகளும், எதிர்பார்ப்புகளும் நிலவி வந்தது. படத்தின் நான் ரெடி பாடல் வெளியானது முதல் ட்ரெய்லர் வெளியானது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. அப்படி இருக்க ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முறியடிக்குமா என நெட்டிசன்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

லியோ படத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்தது மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர அலிகான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்நிலையில் லியோ படம் வெளியாகி 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

முன்னரே லியோ படத்தின் வசூல் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்துவிடுமா என விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியில் வெளியாகி உள்ளது. அதாவது முதல் வாரம் லியோ திரைப்படம் USA மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் 3.7 மில்லியன் வரை வசூலித்தது.
ஆனால் முதல் வாரத்திலேயே ஜெயிலர் USA- வில் மட்டுமே 4 மில்லியன் வரை வசூல் செய்துள்ளது. இதனை வைத்து பார்க்கும் போது முதல் வார வசூலில் லியோ படம் பின்தங்கியே இருக்கிறது. மேலும் நேற்று முன்தினம் மூன்றாவது நாள் மட்டும் USA மற்றும் கனடாவில் லியோ படம் 0.5 மில்லியன் வரை வசூலித்தது. ஆனால் ஜெயிலர் படம் மூன்றாவது நாளில் USA-வில் மட்டும் 4 மில்லியன் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

