தொடர்ந்து காதல் சர்ச்சையில் சிக்கினாலும் எங்கயோ மச்சமிருக்கு… பிக் பாஸ் பிரபலத்துக்கு கிடைத்த புது சீரியல் வாய்ப்பு… ப்ரோமோவை பாத்தீங்களா…? 

By Begam on அக்டோபர் 23, 2023

Spread the love

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆயீஷா. இவர்  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில்  21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அங்கு தனது திறமையான விளையாட்டால் சில நாட்கள் தாக்கு பிடித்தார். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். மேலும் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா என்ற சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர்.

   

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய இவர் 50 நாட்களுக்கும் மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்தார். இதைத் தொடர்ந்து குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் நடிகை ஆயிஷா. பிக் பாஸ் வீட்டில் அவர் தனது சொந்த வாழ்க்கை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதை ரகசியமாகவே வைத்திருந்தார். அவர் இரண்டு முறை விவாகரத்து பெற்றவர் என முன்னாள் காதலர் கொடுத்த பேட்டி வைரல் ஆன நிலையிலும், அது பற்றி ஆயிஷா தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

   

 

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ஆயிஷா. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகும் அந்த சர்ச்சைகள் எதற்கும் பதில் கூறவில்லை. இருப்பினும் அவர் தனது காதலர் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். பிரபல போட்டோகிராபர் ஹரன் ரெட்டி என்பவரை காதலர் தினத்தன்று நிச்சயதார்த்தம் செய்துகொண்டார் ஆயிஷா. அவர்கள் போட்டோவும் இணையத்தில் வைரல் ஆனது.

ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளாத நிலையில் தற்போது காதலரின் புகைப்படங்கள்  அனைத்தையும் ஆயிஷா இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார். அதனால் அவர்கள் பிரிந்துவிட்டார்களா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.  இது பற்றி ஆயிஷா இன்னும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஆயிஷா தெலுங்கில் தொடங்கும் புது சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த சீரியலில் ப்ரோமோ தற்போது இணையதில் வைரல் ஆகி இருக்கிறது. அதில் அம்மன் வேடத்தில் ஆயிஷா இருக்கிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ…