Connect with us

CINEMA

Record Breaking..! ஜெயிலரின் சாதனையை 17 நாளில் முறியடித்த முதல் தமிழ் திரைப்படம்.. கெத்து காட்டும் தளபதி விஜய்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படத்தில் விஜய்க்கு திரிஷா ஜோடியாக நடித்துள்ளார். லியோ படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

   

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ரிலீஸ் ஆன 4 நாட்களில் உலக அளவில் 400 கோடி வசூலித்தது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனை படைத்தது லியோ. முன்னதாக லியோ படத்தின் வசூல் ஜெயிலர் படத்தை விட அதிகமாக இருக்குமா என விவாதங்கள் நடைபெற்றது.

லியோ திரைப்படம் 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூல் செய்து ஜெயிளரின் வசூலை முந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு சாதனையாக லியோ திரைப்படம் வெளியான 17 நாட்களில் ஜெயிலர் திரைப்படத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்து கேரளா பாக்ஸ் ஆபிஸில் அசாதாரண சாதனை படைத்துள்ளது.

கேரளாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது லியோ. சமீபத்தில் லியோ படத்தின் விநியோகஸ்தர் கோகுலம் மூவீசின் சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்த சாதனையை உறுதிப்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவின் பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top