கோலிவுட் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா அவர்கள் நடித்திருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் ,மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.
லியோ படம் தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகின்றது. படத்தின் ரிலீஸ் நெருங்க நெருங்க தொடர்ந்து பிரச்சினைகள் அதிகமாகி கொண்டே இருக்கின்றது. முதலில் ஆடியோ ரிலீஸ் ரத்து செய்தது. ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அதைத் தொடர்ந்து நான் ரெடி பாடலில் நடனமாடியின் நடன கலைஞர்கள் கொடுத்த புகார் மிகப்பெரிய பிரச்சினையாக அமைந்தது.
அதற்குப் பிறகு படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தடை என பல விஷயங்கள் வந்து கொண்டே இருந்தது. ஒரு வழியாக 19ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை லியோ படத்துக்கு 5 காட்சிகள் போடுவதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்திருந்தாலும், 4 மணி காட்சிக்கு ஒப்புதல் தரவில்லை அந்த காட்சி இருந்தால் படத்தின் வசூல் கூடும் என தயாரிப்பு நிறுவனம் எண்ணியிருந்தது. நான்கு மணி காட்சிக்கு அனுமதி வேண்டியும் 9 மணி காட்சியை 7 மணிக்கு போடவேண்டும் என்று கூறி மீண்டும் லியோ தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது.
அதாவது அந்த மனுவில் ஒன்பது மணிக்கு காட்சிகளை வெளியிட்டால், ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் போட முடியாது .எனவே 7:00 மணிக்கு அந்த காட்சியை மாற்றி கொடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது .இந்த மனுவுக்கான விசாரணை இன்று நடைபெறும் இன்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். இதனால் லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் வருமா? வராதா? என்று ரசிகர்கள் வெய்டிங்கில் காத்திருக்கிறார்கள்.
ஈரானின் அணுசக்தி நிலையங்களை முடக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" என்ற பெயரில்…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…