
CINEMA
லியோ 2-nd சிங்கிள் வெளியீடு.. சில நிமிடங்களில் 1 மில்லியன் Views-ஐ கடந்த Badass பாடல்.. கொண்டாடும் ரசிகர்கள்..!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய்த்தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஸ்கின் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவான லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
விஜயின் பிறந்த நாளான ஜூன் மாதம் 22-ஆம் தேதி லீவு படத்தின் முதல் சிங்கிளான நான் ரெடி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அனிருத் இசையில் நடிகர் விஜய் அனிருத் அசல் கோளாறு ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். லியோ படபிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நேரம் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக பட குழுவினர் அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான Badass பாடல் இன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று மாலை 6 மணிக்கு Badass பாடல் வெளியாகி 1 மில்லியன் view’s ஐ கடந்துள்ளது. பாடல் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.