600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த… பழம்பெரும் நடிகை காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகினர்..!

By Nanthini on மார்கழி 9, 2023

Spread the love

கன்னட திரை உலகில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை லீலாவதி. இவர் கன்னடத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர்.

   

அதிலும் குறிப்பாக தமிழில் ரஜினி மற்றும் கமல் ஆகியோருடன் அவள் ஒரு தொடர்கதை, நான் அவன் இல்லை மற்றும் வளர்ப்பினை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை சுமார் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 85 வயதாகும் லீலாவதி மகன் வினோத் ராஜுடன் பெங்களூரை அடுத்த ஒரு மலைப்பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

   

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த இவர் சிகிச்சை பலனின்றி என்று உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.