தொழிலதிபரும், நடிகருமான லெஜெண்ட் சரவணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?. லெஜெண்ட் சரவணன் என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது, அவரின் கலர் ஃபுல் ஆட்டம்… பாட்டம் நிறைந்த விளம்பரங்கள் தான். இவர் நடித்த திரைப்படத்தை விட, இவரின் விளம்பரங்களை விரும்பி பார்ப்பவர்கள் அதிகம். குறிப்பாக இவரின் விளம்பர படங்கள் குழந்தைகளை கவரும் எடுக்கப்பட்டிருந்தது. பொதுவாக கடை உரிமையாளர்கள் சிலர், தங்கள் நிறுவனத்தின் விளம்பரப்படங்களில் நடித்திருந்தாலும், இவர் அளவுக்கு யாரும் ஆடி பாடியது இல்லை. இதுவே இவரை தனித்துவமாக காட்டியது. அதே போல் விளம்பர படங்களில், ஹன்சிகா, தமன்னா போன்ற நடிகைகளுடன் தோன்றி அசரவைத்தார்.
53 வயதிலும் 20 வயது இளைஞர் போல் மிகவும் யங்காகவும்,சுறுசுறுப்பாக இருக்கும் லெஜெண்ட் சரவணன், கடந்த ஆண்டு ‘தி லெஜெண்ட்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை, அஜித் – விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கிய , இரட்டை இயக்குனர்களான ஜெடி – ஜெர்ரி இயக்கி இருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், கலவையான விமர்சனங்களுடன் முதலுக்கு மோசம் இல்லமல் வசூல் செய்ததாக, இந்த படத்தின் தயாரிப்பாளரான லெஜெண்ட் சரவணன் தெரிவித்திருந்தார். அதே போல் விமர்சன ரீதியாக இந்த படத்தின் கதைக்களம் பாராட்டுகளை குவித்தது. ஓடிடி தளத்திலும் இந்த படம் நம்பர் 1 இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது .
விரைவில் தன்னுடைய இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என லெஜெண்ட் சரவணன் தெரிவித்த நிலையில். கூடிய விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பக்காடுகிறது. இந்நிலையில் இவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி பலரை வாயடைக்க செய்துள்ளது. லெஜெண்ட் சரவணனுக்கு சொந்தமாக சென்னையில் பல அடுக்கு மாடி கட்டிடத்துடன் கூட துணிக்கடை உள்ளது. அதே போல் நகை கடையும் உள்ளது. அவருக்கு சொந்தமாக பல வீடுகளும் உள்ளன. சமீபத்தில் தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலியில் மிக பிரமாண்டமான வீடு ஒன்றை காட்டினார். லெஜண்ட் சரவணனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
தன்னுடைய வீட்டை ஹை-டெக் தொழில்நுட்பத்துடன் வடிவமைத்து காட்டியுள்ளார் சரவணன். மேலும் இவரின் வீட்டில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கிறார்களாம். இவரிடம் 10க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் உள்ளது. இவற்றை நிறுத்துவதற்கு என மிக பிரமாண்ட பார்க்கிங் ஒன்றையும் இவர் வீட்டில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுஒருபுரம் இருக்க லெஜெண்ட் சரவணன் தன்னுடைய நிறுவனங்கள் மூலம் ஒரு நாளைக்கு 1 கோடி முதல் 1.5 கோடி வரை சம்பாதித்து வருகிறார். இவரின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு சுமார் 6000 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
All Set for#LegendsNext
Process Started….
Revealing Soon…#Legend#LegendSaravanan#Anbanavan pic.twitter.com/rzUlwJBytg— Legend Saravanan (@yoursthelegend) January 19, 2024
