லெஜண்ட் சரவணன் 24 மணி நேரம் அன்ன தானம், என் மீது அன்பு வைத்திருக்கும் என் மக்களுக்காக என் வீடு எப்போதும் திறந்திருக்கும் என்றும் புகைப்படங்களோடு கூடிய செம சர்ப்ரைஸ் ஒன்றை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
‘லெஜண்ட் சரவணன்’ என்ற இந்த பெயரை அவ்வளவு எளிதில் தமிழகத்தில் யாரும் மறக்க முடியாது. தனது நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் தானே நடித்து பிரபலமானவர்தான் ‘லெஜண்ட் சரவணன்’. இவர் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்த திரைப்படம் ‘தி லெஜன்ட்’.
‘நியூ சரவணா ஸ்டோர்ஸ்’ புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து, நடிக்கும் இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ‘வேல்ராஜ்’ ஒளிப்பதிவில், இசையமைப்பாளர் ‘ஹாரிஸ் ஜெயராஜ்’ இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். லெஜண்ட் சரவணன் உடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடித்திருந்தார்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது. ஆனால், வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், தற்போது அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் லெஜண்ட் சரவணன்.
24 மணி நேரம் அன்ன தானம், என் மீது அன்பு வைத்திருக்கும் என் மக்களுக்காக என் வீடு எப்போதும் திறந்திருக்கும் என்றும் புகைப்படங்களோடு கூடிய செம சர்ப்ரைஸ் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…