செம்ம சர்பிரைஸ் கொடுத்த லெஜெண்ட் சரவணன்… 24/7 அன்னதானம்…கூட்டம் அள்ளுது…இந்த விளம்பரம் எதுக்குன்னு தெரியலையே…

By Begam

Published on:

லெஜண்ட் சரவணன் 24 மணி நேரம் அன்ன தானம், என் மீது அன்பு வைத்திருக்கும் என் மக்களுக்காக என் வீடு எப்போதும் திறந்திருக்கும் என்றும் புகைப்படங்களோடு கூடிய செம சர்ப்ரைஸ் ஒன்றை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

‘லெஜண்ட் சரவணன்’ என்ற இந்த பெயரை அவ்வளவு எளிதில் தமிழகத்தில் யாரும் மறக்க முடியாது. தனது  நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் தானே நடித்து பிரபலமானவர்தான் ‘லெஜண்ட் சரவணன்’. இவர் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்த திரைப்படம் ‘தி லெஜன்ட்’.

   

‘நியூ சரவணா ஸ்டோர்ஸ்’ புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து, நடிக்கும் இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ‘வேல்ராஜ்’ ஒளிப்பதிவில், இசையமைப்பாளர் ‘ஹாரிஸ் ஜெயராஜ்’ இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். லெஜண்ட் சரவணன் உடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடித்திருந்தார்.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது. ஆனால், வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், தற்போது அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார் லெஜண்ட் சரவணன்.

24 மணி நேரம் அன்ன தானம், என் மீது அன்பு வைத்திருக்கும் என் மக்களுக்காக என் வீடு எப்போதும் திறந்திருக்கும் என்றும் புகைப்படங்களோடு கூடிய செம சர்ப்ரைஸ் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.