CINEMA
இந்த காக்க, கழுகு கதையால ஒரு புரோஜனம் இல்ல.. ரஜினி விஜயை நேரடியாக தாக்கி பேசிய லெஜெண்ட் சரவணன்..
சமீபத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர், நடிகர் லெஜண்ட் சரவணன் வியாபாரிகள் சங்க கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்றார். அதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜனும், வியாபாரிகள் சங்க மாநில தலைவர் விக்கிரம ராஜாவும் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் லெஜண்ட் சரவணன் பேசியதாவது, எந்த ஒரு நாட்டில் வியாபாரம் செழித்து இருக்கிறதோ, அந்த நாட்டில் பொருளாதாரம் அந்த நாட்டில் வலிமை மிக்கதாக இருக்கும். நாட்டின் வளர்ச்சிக்கு வியாபாரம் செழிப்பாக இருக்க வேண்டும்.
இந்த காக்கா, கழுகு கதையால் ஒரு பயனும் இல்லை. அவருக்கு அந்த பட்டம், இவருக்கு இந்த பட்டம் இதை பற்றி பேசியெல்லாம் இதனால் மற்ற யாருக்கும் எந்தவிதமான பிரயோசனும் கிடையாது. நாம் உழைத்தால் மட்டும்தான் வாழ்க்கையில் உயர முடியும். நாம் உயர்ந்தால் நம் நாடும் உயரும். நாம் உழைத்து வாழ்க்கையில் முன்னேறுவோம் என்று பேசி இருந்தார் லெஜண்ட் சரவணன். வியாபாரிகள் சங்க கட்டிட திறப்பு விழாவில் ரஜினி, விஜய் பற்றி லெஜண்ட் சரவணன் பேசுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இப்போதுதான் ரஜினி பேசிய காக்கா, கழுகு கதை பிரச்னை ஓய்ந்திருக்கிறது. லெஜண்ட் சரவணன், இரண்டு படங்களில் மட்டுமே இதுவரை நடித்திருக்கிறார். பெரிய தொழிலதிபர் என்பதால், அவர் நடிக்கும் படங்களை அவரே தயாரித்து வெளியிடுகிறார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்தும், தளபதி விஜ் குறித்தும் இவர் எதுக்கு தேவையின்றி விமர்சித்து பேசுகிறார் என்பதும் பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. எப்படியும் ஏதேனும் ஒரு விதத்தில் டிரண்டிங் ஆக வேண்டும் என்ற விளம்பர நோக்கத்தில் அவர் பேசி இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.