திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திமுக எம்பி திருச்சி சிவாவின் மகள் காயத்ரி தவெக-வில் இணைந்திருந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து திமுகவின் முக்கியப் புள்ளிகளின் வாரிசுகள் விஜய் தலைமையிலான கட்சியில் ஐக்கியமாவது திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுங்கட்சியின் முக்கியத் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
