பனையூரில் குவிந்த முன்னாள் MLA-க்கள்… எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த ரவி மரியா… மொத்தமாக சரிந்த அதிமுக கூடாரம்….!

By Nanthini on ஆடி 4, 2026

Spread the love

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, தீவிர அதிமுக ஆதரவாளராக இருந்து கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட பிரபல திரைப்பட நடிகர் ரவி மரியா, தற்போது அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி மாண்புமிகு விஜய் அவர்களின் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ இணைந்துள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் அவர் முறைப்படி தங்களை இணைத்துக் கொண்டார். நடிகர் ரவி மரியா மட்டுமன்றி, அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் (Ex-MLAs) பலரும் இன்று தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, தவெகவின் அரசியல் நகர்வு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதை இது உறுதிப்படுத்தியுள்ளது.