உடற்பயிற்சி செய்யாமலேயே உடல் எடையை குறைக்கணுமா?… அப்போ தினமும் இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்… நீங்களும் ஸ்லிம்மா மாறலாம்…!

By Nanthini on மார்கழி 25, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அதிகரித்து வரும் வேலையின் தாக்கம், மன அழுத்தம், ஒரே இடத்தில் அமர்ந்தபடி மணி கணக்கில் வேலை செய்வது, துரித உணவுகளில் நுகர்வு அதிகரித்தமை, போதிய உடற்பயிற்சி இல்லாதது மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல்வேறு காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது.

பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக அமையும் உடல் பருமன் பிரச்சனைக்கு உடற்பயிற்சி செய்யாமல் தீர்வு காண முடியும். உடற்பயிற்சியே இல்லாமல் உடல் எடையை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். அதற்கு முக்கியமாக நம்முடைய உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதாவது உடல் பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க எவ்வாறு செயல்பாடுகள் துணை புரியும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்.

   

பெரும்பாலானவர்கள் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையுமென்று நினைக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறானது. ஆரோக்கியமான உணவு மற்றும் சரிவிகித உணவானது எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள், குறைந்த அளவில் கொழுப்பு சத்தை கொண்ட புரத உணவுகளை தினசரி உணவில் முறையாக எடுத்துக் கொள்வதாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பான சிற்றுண்டிகள், அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் மற்றும் சர்க்கரை கலந்த பானங்களை தவிர்ப்பதாலும் உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை கட்டுப்படுத்தலாம்.

   

குறிப்பாக தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம்முடைய உடலில் இருந்து நச்சுக்களை நீக்கி உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றது. சிலர் தாகம் எடுக்கும் போது அதையும் பசி என்று நினைத்து அந்த நேரத்தில் அந்த உணர்வை போக்குவதற்காக அதிக அளவில் தேவையற்ற சிற்றுண்டிகளை சாப்பிடுகிறார்கள். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது இந்த பிரச்சனைக்கு தீர்வு. மேலும் உடல் எடை குறைப்பில் உடற்பயிற்சியை விடவும் போதிய அளவு தூக்கம் முக்கிய இடம் வகிக்கின்றது. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியமாகும்.

 

தூங்குவதில் குறைபாடு ஏற்படும்போது அது பசியை ஏற்படுத்தும் ஹார்மோன்களை பாதித்து ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிட வழிவகுக்கும். தூக்கமின்மை மன அழுத்தத்திற்கும் முக்கிய காரணமாக அமைகின்றது. மன அழுத்தம் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக மாறிவிடும். எனவே போதிய தூக்கம் இன்றி அமையாதது. மன அழுத்தம் உடல் எடை அதிகரிப்பில் நேரடியாக தாக்கம் செலுத்துவதால் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது அவசியம்.

தியானம், பாடல் கேட்பது மற்றும் நடைப்பயிற்சி செய்வது ஆகியவை மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன. பிடித்த உணவுகளையெல்லாம் பார்க்கும் போது மட்டும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கம் உடல் எடையை அதிகரிப்பதற்கு முக்கிய காரணி ஆகும். எனவே எந்த உணவாக இருந்தாலும் அதனை நாம் எடுத்துக் கொள்ளும் அளவு தொடர்பில் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பது உடல் எடையை விரைவில் குறைக்க உதவியாக இருக்கும். இதையெல்லாம் தினந்தோறும் சரியாகப் பின்பற்றி வந்தால் உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை உங்களால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.