இந்திராகாந்தியை போல பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தால்… டிரம்ப் அப்படிப்பட்டவர்னு சொல்லட்டும்.. ராகுல்காந்தி பகிரங்க சவால்..!!

By Soundarya on ஆடி 29, 2025

Spread the love

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “தனது இமேஜை பாதுகாக்க ராணுவத்தை பயன்படுத்துகிறார் பிரதமர் மோடி. பாதுகாப்புப் படைகளை தவறாக அவர் பயன்படுத்துவது அபாயகரமானது பஹல்காம் தாக்குதலின் மூளையான பாகிஸ்தான் ராணுவத் தளபதி, ட்ரம்ப் உடன் விருந்து சாப்பிடுகிறார். பிரதமர் மோடி ட்ரம்பிடம் இதை கேட்க முடிந்ததா? இந்தியப் படைகளின் நகர்வு குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியுள்ளது.

ஆனால், சீனா என்ற பெயரையே பாதுகாப்பு அமைச்சரும், வெளியுறவு அமைச்சரும் சொல்லவில்லை தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். அவர்களின் கைகளைக் கட்டிவிட்டு போருக்கு அனுப்பக் கூடாது. பஹல்காம் தாக்குதலின் மூளையான பாகிஸ்தான் ராணுவத் தளபதி, ட்ரம்ப் உடன் விருந்து சாப்பிடுகிறார். பிரதமர் மோடி ட்ரம்பிடம் இதை கேட்க முடிந்ததா? இந்திராகாந்தியை போல பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தால் ட்ரம்ப் ஒரு பொய்யர் எனக் கூறட்டும் என பகிரங்க சவால் விடுத்துள்ளார்.