கைகொடுத்த வாழைப்பழம்..? செஸ் உலக கோப்பையை திவ்யா தேஷ்முக் வென்றது இப்படித்தானா..? சுவாரஸ்ய தகவல்..!!

By Soundarya on ஆடி 29, 2025

Spread the love

மகளிருக்கான உலகக்கோப்பை செஸ் தொடரானது ஜார்ஜாவில் கடந்த நான்காம் தேதி தொடங்கியது. இதில் 46 நாடுகளைச் சேர்ந்த 107 வீராங்கனைகள் பங்கேற்றார்க.ள் இதன் இறுதிப் போட்டிக்கு கோனெரு ஹம்பி- திவ்யா தேஷ்முக் ஆகிய இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றனர். முதல் ஆட்டமானது டிரா ஆனதால் கிளாசிக் முறையிலான இரண்டாவது ஆட்டம் நடந்தது. இந்த போட்டியின் டிராவானது பிறகு டை பிரேக்கர் முறையில் கோனெரு ஹம்பியை வீழ்த்தி திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

இதன் மூலம் மகளிர் செஸ் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்திருக்கிறார்.இவர் எப்போதுமே செஸ் போட்டியின்போது பக்கத்தில் வாழைப்பழத்தை வைத்து கொள்வாராம். அந்த வாழைப்பழத்தை அவர் சாப்பிடாமல் இருப்பார். இவ்வாறு தொடப்படாத வாழைப்பழம் பலமுறை அவருக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளதாம். அந்த வகையில் டை பிரேக்கர் போட்டியிலும் அவர் கொண்டு சென்ற வாழைப்பழத்தை சாப்பிடாமல் அப்படியே வைத்திருந்துள்ளார். பலவீரர் வீராங்கனைகள் தங்களுக்கு என்று ஒரு செண்டிமெண்ட் கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.