பட்டப்பகலில் துணிகரம்..! மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலேயே வழக்கறிஞர் சுட்டுக்கொலை.. அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

By Soundarya on மாசி 12, 2026

Spread the love
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில், வழக்கறிஞர் ஃபரூக் என்பவர் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாவட்ட மருத்துவமனை எழுத்தர் அஸ்கர் அலி என்பவருடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அலுவலக வளாகத்திற்குள்ளேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் போது வழக்கறிஞரின் மனைவியும் துப்பாக்கியால் தலையில் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்தக் கொடூரமான தாக்குதல் அம்மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசு அலுவலகங்களிலேயே வெளிப்படையாகக் கொலைகள் நடப்பதும், பெண்கள் தாக்கப்படுவதும் குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீது பயம் இல்லை என்பதையே காட்டுவதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.