actor santhanam

மீண்டும் காமெடிக்கு மாறிய நடிகர் சந்தானம்… அந்த படத்தில் அவரும் நடித்திருக்கிறாரா? – ரசிகர்களுக்கு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியா?

By Elango on மாசி 12, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் இப்போது காமெடி நடிகர்களுக்கு பெரிய தட்டுப்பாடு நிலவுகிறது. ஏனெனில் காமெடி நடிகர்கள் எல்லாமே கதாநாயகன்களாக நடித்து வருகின்றனர். இப்போது யோகிபாபு ரெடின் கிங்ஸ்லி போன்றவர்கள்தான் காமெடி என்ற பெயரில் திரையில் வந்து போகின்றனர்.
நடிகர் சந்தானம் போன்றவர்கள் காமெடிக்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் 2 படத்தில் நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார். இப்போது லேட்டஸ்ட் தகவலாக இந்த படத்தில் நடிகர் சந்தானமும் நடித்திருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த படத்திலும் சிம்பு நடிக்க கமிட் ஆகியிருந்தார். ஆனால் அந்த படம் துரதிர்ஷ்டவசமாக டிராப் ஆகி விட்டது. ஆனால் ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் நடித்திருப்பது உறுதியாகி உள்ளது.