பெங்களூருவில் வாடகை பாக்கி விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் பீகாரைச் சேர்ந்த வாடகைதாரர்களால் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வாடகைக்கு விடப்பட்ட வீட்டின் உரிமையாளரான இந்த வழக்கறிஞர், பல மாதங்களாக செலுத்தப்படாமல் இருந்த வாடகையைத் தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளருக்கும் வாடகைதாரர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த வாடகைதாரர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு வழக்கறிஞரை சரமாரியாகச் சுட்டுக் கொன்றுவிட்டு உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.
சம்பவத்திறகுக் காரணமானவர்களைக் கைது செய்யக் கோரி காவல்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
