உனக்கு என்ன வயசு…? முதல்வர் விஜயை ஒருமையில் பேசிய திமுக நிர்வாகி…  சிரித்த மேயர் பிரியா, மௌனம் காக்கும் கனிமொழி… அரசியல் களத்தில் வெடித்த சர்ச்சை…!!

By Devi Ramu on ஐப்பசி 19, 2026

Spread the love

சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பெண் நிர்வாகி ஒருவர், தமிழக முதல்வர் விஜயை ஒருமையில் தரக்குறைவாகப் பேசிய விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் தீப்பற்ற வைத்துள்ளது. அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கிடையேயான மோதல்கள் உச்சத்தில் இருக்கும் சூழலில், நேற்று சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய பெண் நிர்வாகி ஒருவர், முதல்வர் விஜய்யின் வயது மற்றும் செயல்பாடுகளைக் குறிப்பிட்டு நாகரிகமற்ற முறையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசும் போது “சட்டப்பேரவையில் அமர்ந்து, எங்கள் தலைவர் (ஸ்டாலின்) அழகை குறை சொல்கிறார்.  எங்கள் தலைவருக்கு வயது 74. உனக்கு என்ன வயது 52 வயது தான் என கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் எம்பி கனிமொழி மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் மேடையில் இருந்த நிலையில், அந்தப் பேச்சைக் கேட்டு மேயர் பிரியா சிரித்ததாகவும், கனிமொழி எம்பி எந்தவித கண்டனமும் தெரிவிக்காமல் மௌனம் காத்தது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, “திமுகவின் அநாகரிகப் பேச்சுக்கும் மகளிர் அணிக்கும் இதுதான் வாடிக்கை; ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதை மேடையில் அமர்ந்து ரசிப்பது எந்த வகையான அரசியல் பண்பாடு?” எனத் தீவிரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.