தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், மாநிலத்தின் கடன் சுமை காரணமாக ஒவ்வொரு குடிமகன் மீதும் தலா ரூ.1.28 லட்சம் கடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரியாஸ் அகமது என்பவர், தன் பங்கிற்கான ₹1.28 லட்சம் கடனை அடைக்கும் வகையில் அதற்கான காசோலையை (Cheque) அமைச்சர் குமாரிடம் நேரடியாகச் சந்தித்து வழங்கியுள்ளார்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமையால் ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி மட்டுமே கட்டப்பட்டு வரும் சூழலில், அரசின் நிதிநிலை மற்றும் தனிநபர் கடன் குறித்த விவாதங்கள் தற்போது மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளன.
