“40 லட்சம் கொடு” இல்லாவிட்டால்… ஹோட்டல் ரூமில் பெண்ணோடு உல்லாசமாக இருந்த வழக்கறிஞர்… வெளியே வந்த அடுத்தநொடியே வாட்ஸ்அப்பில் வந்த அதிர்ச்சி வீடியோ… அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…!!

By Soundarya on மாசி 9, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில், வழக்கறிஞர் ஒருவரைத் திட்டமிட்டுத் தனது வலையில் வீழ்த்திய பிரியங்கா என்ற பெண், அவருடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். ஹோட்டலை விட்டு வழக்கறிஞர் வெளியேறிய சில நிமிடங்களிலேயே, அந்த வீடியோவை அவரது வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவாமல் இருக்கவும், தன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்காமல் இருக்கவும் ஒரு மணி நேரத்திற்குள் 40 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்.

பணம்கேட்டு மிரட்டல் வந்ததும் பதற்றமடையாத அந்த வழக்கறிஞர், துரிதமாகச் செயல்பட்டு பார்மர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து நடந்த உண்மைகளை விவரித்துள்ளார். அவரது புகாரின் பேரில் உடனடியாகக் களமிறங்கிய தனிப்படை போலீசார், அந்தப் பெண்ணையும் அவருக்கு உதவியாக இருந்த கூட்டாளி ஒருவரையும் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள அந்தப் பெண்ணிடம், இதற்கு முன்னதாக இதுபோல வேறு யாரையேனும் மிரட்டிப் பணம் பறித்துள்ளாரா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.