“த்ரிஷா மாதிரி ஒரு மனைவி எனக்கு வேணும்” பல அவமானம், கேலி கிண்டல்… கல்யாணக் கனவு குறித்து பிக்பாஸ் திவாகர் ஓபன் டாக்..!!

By Soundarya on மாசி 9, 2026

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான திவாகர், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திருமணத் திட்டங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது, “உங்களுக்கு எந்த மாதிரி மனைவி அமைய வேண்டும்?” என்ற கேள்விக்கு, சற்றும் யோசிக்காமல் “த்ரிஷா மேடம் மாதிரி ஒரு வைஃப் வேணும்” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். த்ரிஷாவின் ஸ்டைல் மற்றும் அழகு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் ஜாலியாகக் குறிப்பிட்டார். பல அவமானங்கள், கேலி, கிண்டல்கள் தாண்டி ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எப்போதும் பார்க்காத ஒரு கோணத்தில் ஒரு நடிப்பு அரக்கனை வெள்ளி திரையில் நீங்கள் விரைவில் காண்பீர்கள் என்றார்.

திவாகரின் இந்தப் பேச்சு த்ரிஷா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பேட்டியின் போது திவாகர் காட்டிய அந்த எதார்த்தமான குணமும், குறும்புத்தனமான பேச்சும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதோடு, இந்த வீடியோ கிளிப் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களில் டிரெண்டாகி வருகிறது.