சொன்ன சொல்லை காப்பாற்றும் ராகவா லாரன்ஸ்.. விஜயகாந்த் மகனுக்காக செய்யப் போகும் மிகப்பெரிய விஷயம்..!

By Mahalakshmi on ஜூலை 3, 2024

Spread the love

சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தனது படங்களில் மூலம் பிரபலமானதை காட்டிலும் தனது உதவும் குணத்தால் மிகப்பெரிய புகழே எட்டி இருக்கின்றார். சமீப காலமாக தொடர்ந்து பட உதவிகளை செய்து வரும் இவர் மே ஒன்றாம் தேதி முதல் மாற்றம் என்று அறக்கட்டளையை தொடங்கியிருக்கின்றார்.

   

இதுல் ஏராளமான பிரபலங்கள் இணைந்து பலருக்கும் உதவி செய்து வருகிறார்கள். சமீபத்தில் தான் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக டிராக்டர் வாங்கி கொடுத்திருந்தார். இவரை அரசியலுக்கு பலரும் அழைத்து வருகிறார்கள். ஆனால் தான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று உறுதியாக இருக்கின்றார். இந்நிலையில் தற்போது அவரின் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

 

பொதுவாக இவர் வீடியோ வெளியானாலே அது யாருக்காவது அவர் உதவி செய்ததாக தான் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் இது. தமிழ் சினிமாவில் கேப்டன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். இவரின் மறைவு இன்றளவும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது. இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். விஜய பிரபாகரன் சண்முக பாண்டியன்.

விஜயபிரபாகரன் அரசியலில் இருந்து வரும் நிலையில் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்து வருகின்றார். நடிகர் விஜயகாந்த் இறப்பிற்கு பிறகு சண்முக பாண்டியன் உடன் ஏதாவது ஒரு திரைப்படத்தில் நான் நடிக்க விரும்புகிறேன். நல்ல கதை இருந்தால் கூறுங்கள் என்று தெரிவித்திருந்தார் ராகவா லாரன்ஸ். அது தற்போது நிறைவேறி இருக்கின்றது.

அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்ததாவது “விஜயகாந்த் எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக்கின்றார். மக்களுக்காக மட்டுமல்லாமல் நடிகர்களின் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்திருக்கின்றார். அவருடைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த சில உதவிகளை செய்வேன். அவர் நடிக்கும் படைத்தலைவன் படத்தில் ஒரு கேமியோ ரோலிங் என நடிக்க கூப்பிட்டால் நான் கண்டிப்பாக நடித்துக் கொடுப்பேன்” என்று கூறியிருந்தார்.

அதேபோல அந்த படத்தில் ஒரு கேமியோ ரோலில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கின்றார். அதுமட்டுமில்லாமல் சண்முக பாண்டியன் நடிக்கும் மற்றொரு திரைப்படத்திலும் ராகவா லாரன்ஸ் செகண்ட் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. சண்முக பாண்டியன் வளர்ச்சிக்கு ஒரு தந்தையாக இருந்து விஜயகாந்த் என்ன செய்வாரோ அதை தற்போது ராகவா லாரன்ஸ் செய்து வருகிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.