சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவானது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சீரியல்களுக்கு பஞ்சமே கிடையாது. பல தொலைக்காட்சிகளில் சீரியல்கள் வரிசை கட்டி ஒளிபரப்பாகி வருகின்றன. சன் டிவி ,விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல சேனல்களில் தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. அதிலும் சன் டிவி தான் சீரியலுக்கு பெயர் போனது. காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது.

#image_title
பொதுவாக சீரியலில் ஒருவர் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு பதில் வேறு ஒருவர் மாறுவது என்பது வழக்கம் தான். சின்னத்திரையில் இந்த விஷயம் அதிக அளவில் நடந்து வரும். அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து நடிகை ஷபானா வெளியேற அந்த சீரியலில் தற்போது புதிய கதாநாயகி நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மற்றொரு பிரபலம் சீரியலில் இருந்து விலகி இருக்கின்றார். சன் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் மலர். இந்த சீரியலில் ப்ரீத்தி சர்மா கதாநாயகியாக நடித்த வந்தார். தற்போது அவர் சீரியல் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்து வருகின்றார். அதாவது மோதலும் காதலும் சீரியலில் நடித்து வந்த அஸ்வதி மலராக அந்த சீரியலில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் மலர் சீரியலில் இருந்து வெளியேறியது குறித்து இதுவரை எதுவும் பேசாமல் இருந்து ப்ரீத்தி சர்மா தற்போது ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில் மலர் சீரியலில் இருந்து வெளியேறியது நான் எடுத்த மிக கடினமான முடிவு. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. அருமையான குழுவை மிஸ் செய்கிறேன் என்று பதிவு செய்திருந்தார். ஆனால் ஏன் வெளியேறினேன் என்பது குறித்து எந்த ஒரு தகவலையும் அவர் கூறவில்லை.