“திமுக-வை விட மோசமான தவெக அரசு…” உயிர்களுக்கு விலை பேசுகிறாரா விஜய்?… ஆட்சிக்கு வந்த 60 நாட்களிலேயே இப்படியா… முதலமைச்சரை வறுத்தெடுத்த EPS… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!

Spread the love

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளின் மர்ம மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போதைய தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாகர்கோவில் மற்றும் சென்னை புழல் சிறைகளில் நிகழ்ந்துள்ள கைதிகளின் மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முந்தைய திமுக ஆட்சியைப் போலவே தற்போதைய தவெக அரசும் விலைமதிப்பற்ற மனித உயிர்களுக்கு விலை பேசும் ஒரு ‘துஷ்ட சக்தியாக’ மாறி செயல்பட்டு வருகிறது என்று அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி வழங்குவதை விடுத்து, அமைச்சர்களை அனுப்பி நிவாரண நிதி என்ற பெயரில் பணத்தை வாரி இறைத்து அப்பாவிகளின் வாயை அடைக்க இந்த அரசு முயல்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்கள், தற்போது ‘யானையின் பிடியிலிருந்து தப்பி முதலையின் வாய்க்குள் விழுந்தது போல’ பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், ஆட்சிக்கு வந்த 60 நாட்களுக்குள்ளேயே முதலமைச்சருக்கு இத்தகைய மமதை எண்ணம் வந்திருப்பது வேதனைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திரையுலகில் கோடி கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு நடிப்பதைக் போல ஆட்சி சக்கரத்தை நடத்த முடியாது என்பதை தவெக முதலமைச்சர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை கொடுத்ததுடன் தங்களின் கடமை முடிந்துவிட்டது என ஆட்சியாளர்கள் மிதப்பில் இருக்கக் கூடாது என்றும், இனிமேலாவது ஏமாற்றத்தைத் தராத வகையில் நேர்மையான முறையில் ஆட்சியை நடத்த வேண்டும் என்றும் தனது அறிக்கையின் வாயிலாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

Visaka

Recent Posts

அடச்சீ… மனைவிக்குத் துரோகம்… தொடர் கொடூர தாக்குதல்… விவாகரத்தை உறுதிசெய்து ஜீவனாம்சத்தை… ரூ 6 லட்சமாக கூட்டிய உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த விவாகரத்து வழக்கில், மனைவியின் மீதான கூடுதல் கணவரின் தாக்குதல் மற்றும் திருமணத்திற்குப் புறம்பான உறவு…

4 minutes ago

அய்யய்யோ… என்ன கொடுமை இது?… ஓடும் ராபிடோ பைக்கில்… பயணியின் கையைப் பிடிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர்… வைரலாகும் வீடியோ… பெங்களூருவில் நடந்த ஷாக்கிங் சம்பவம்…!!

பெங்களூருவில் ராபிடோ பைக்குகளில் பயணிப்பவர்கள் பாதுகாப்புக் குறித்த அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் முக்கியப்…

22 minutes ago

திக் திக்… காலை நடைபயிற்சியில் அதிர்ச்சி மரணம்… கணவரைக் தீர்த்துக்கட்ட மனைவி செய்த கொடூர சதி… நெஞ்சை நடுங்கவைக்கும் பகீர் பின்னணி…!!

விஜயாப்பூரில் காலையில் நடைபயிற்சியின் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான நபர் விபத்து மரணம் அல்ல, மாறாக திட்டமிடப்பட்ட…

31 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன தாயா?… காதலனுக்காக பெற்ற இரட்டை மகன்களைக் கொன்ற கொடூரம்… 6 மணி நேரத்தில் அதிரடி கைது… ராஜஸ்தானில் நடந்த பகீர் சம்பவம்…!

ராஜஸ்தானின் டீக் மாவட்டத்தில் உள்ள ஒரு வயலில் 13 வயது இரட்டைக் குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…

35 minutes ago

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

9 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

9 மணத்தியாலங்கள் ago