மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பொறையாறு ஆகிய மூன்று முக்கிய அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள டிஜிட்டல் பெயர் பலகைகளில் (Digital Display Boards) தொடர்ந்து குளறுபடிகள் ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், மயிலாடுதுறையிலிருந்து அணைக்கரை சென்ற நகர பேருந்து ஒன்றின் டிஜிட்டல் திரையில், ஊரின் பெயருக்குப் பதிலாக ‘குத்தாலம் பயலுக கொடூரமா’ என்ற வாசகம் ஆங்கிலத்தில் ஓடியுள்ளது. இதனை அங்கிருந்த இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, தற்போது இந்த விவகாரம் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறும்போது, குறிப்பாக கிராமப்புறங்களுக்குச் செல்லும் நகர பேருந்துகளில் இதுபோன்ற பெயர் குளறுபடிகள் நடப்பதால், எழுத்தறிவு இல்லாத பாமர மக்கள் மற்றும் முதியவர்கள் எந்த பேருந்தில் ஏறுவது என்று தெரியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது என கவலை தெரிவித்துள்ளனர். மேலும், பேருந்து புறப்படுவதற்கு முன்பாக பெயர் பலகையில் ஊர்களின் பெயர்கள் சரியாகத்தான் உள்ளதா என்பதை ஓட்டுநர்களும் நடத்துநர்களும் சரிபார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சர்ச்சை குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, இது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு (Technical Glitch) காரணமாக நடந்திருக்கலாம் என்றும், இது போன்ற பிழைகள் கண்டறியப்பட்டால் அவை உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டம் உத்கிர் பகுதியில், மாந்திரீகம் மற்றும் மூடநம்பிக்கையின் பெயரில் 15 வயது சிறுமிக்கு இழைக்கப்படவிருந்த பயங்கரம் நல்வேளையாகத்…
சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மற்றும் மரியாதை நிமித்தமான பழக்கவழக்கங்கள் குறித்த விவாதங்கள் அவ்வப்போது எழுவது இயல்பான ஒன்று. சமீபத்தில் தமிழகச்…
தமிழகத்தில் 'வி தி லீடர்ஸ்' என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி தீவிரப் பணியாற்றி வரும் அண்ணாமலை, அதனை விரைவில் முழுமையான…
பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் பொறுப்பில் இருந்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 6…
சேலம் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரை…
விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கான தள்ளுபடி திட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி,…