தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசியல் மற்றும் சினிமா வெற்றி மீது நடிகர் ரஜினிகாந்துக்குப் பொறாமை இருப்பதாக எழும் விமர்சனங்களுக்கு, அவரது மனைவி லதா ரஜினிகாந்த் காட்டமாகப் பதிலளித்துள்ளார். ஊடகப் பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஆளுமையிலும் தலைமையிலும் முன்னுதாரணமாக இருக்கும் தனது கணவர் ரஜினிகாந்த் அனைவருக்கும் ஒரு சிறந்த ‘ரோல் மாடல்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி இது போன்ற பொறாமை வதந்திகளைப் பரப்புவதே மிகப்பெரிய தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூகத்தில் தீயதை பரப்புவதற்காகவே ஒரு சிறு குழு செயல்பட்டு வருவதாகச் சாடியுள்ள லதா ரஜினிகாந்த், அவர்கள் ஒரு சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி மக்கள் மனதில் விஷத்தை விதைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். ரஜினிகாந்த் போன்ற ஒரு மூத்த ஆளுமை குறித்து ஆதாரமற்ற கருத்துகளைப் பரப்புவதை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தற்பொழுது ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
