14 வயதில் சினிமாவில் பாடுகையாக அறிமுகமாகி 21 வயதில் தேசிய விருது வென்ற முதல் பின்னணி பாடகி ஆனவர்தான் ஸ்வர்ணலதா. மெலடி,சோகம், குத்து பாடல் என அனைத்து விதமான ஜானகிலும் பாடல் பாடி இதமான குரலால் இதயத்தில் நுழைந்தவர் தமிழ் சினிமாவின் ஹம்மிங் குயின் என்று அழைக்கப்பட்ட பாடகி சுவர்ணலதா. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் படித்தது எல்லாம் கர்நாடகாவில் தான். சிறுவயதிலேயே பாடல் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தனது தந்தை இறந்து போனதால் குடும்பத்துடன் சென்னைக்கு குடியேறினார். இசை குடும்பப் பின்னணியில் இருந்து வந்த ஸ்வர்ணலதாவுக்கு இயல்பிலேயே இசை மீதான ஆர்வம் தொற்றிக்கொள்ள மூன்று வயதில் இருந்தே இசையை முறையாக கற்றுக் கொண்ட இவர் ஹார்மோனியம் மற்றும் கீபோர்ட் இசையமைப்பதிலும் வல்லவராக இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் கர்நாடக சங்கீதம் மற்றும் இந்துஸ்தானி இசை என வல்லமை பெற்ற ஸ்வர்ணலதாவுக்கு அவருடைய சகோதரி சரோஜா தான் இசை குருவாக திகழ்ந்துள்ளார். மேடை கச்சேரிகளை பாடி வந்த ஸ்வர்ணலதா குடும்பம் சென்னைக்கு குடி பெயர் அங்கு அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைக்கிறது. மெல்லிசை மன்னார் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் நீதிக்கு தண்டனை என்ற திரைப்படத்தில் சின்னஞ்சிறு குயிலே என்ற பாடல் தான் இவர் முதன் முதலில் பாடியது. இந்தப் பாடலை பாடிய போது அவருக்கு வெறும் 14 வயது தான். அதன் பிறகு ஸ்வர்ணலதாவின் குரல் பிடித்துப் போக இசைஞானி இளையராஜா தனது குரு சிஷ்யன் படத்தில் உத்தமபுத்திரி நான் என்ற பாடலை பாட வைத்தார்.
இவருடைய மந்திர குரல் ரசிகர்களுக்கும் பிடித்து போக தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடினார். ஒரு கட்டத்தில் ஸ்வர்ணலதா பாடல் பாடினாலே கேரண்டி ஹிட் என்ற நிலையில் இவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் பட்டி தொட்டி எங்கும் வரவேற்பை பெற்றது. ஏ ஆர் ரகுமான் இசையில் முதல் முறையாக ஸ்வர்ணலதா ஜென்டில்மேன் படத்தில் இடம் பிடித்த உசிலம்பட்டி பெண்குட்டி என்ற பாடல் தான். அதன் பிறகு ஸ்வர்ணலதாவை பாட வைத்து ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களையும் காலத்தால் அழியாமல் நிற்கும் மெலடி பாடல்களையும் ஏ ஆர் ரகுமான் கொடுத்தார். மெலடி பாடல்கள் காதலில் உருக வைக்கவும் கானா மற்றும் குத்து பாடல்கள் குத்தாட்டம் போடவும் சோக பாடல்கள் பாடல்களால் கண்களில் கண்ணீர் வர வைக்கவும் தன்னுடைய அற்புத குரலின் மூலம் பாடல் கேட்பவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வைத்தவர் தான் ஸ்வர்ணலதா.
சத்ரியன் படத்தில் பானுப்பிரியா சோலோவாக பர்ஃபார்ம் செய்திருக்கும் மாலையில் யாரோ மனதோடு பேச, வள்ளி படத்தில் இடம்பெற்ற என்னுள்ளே என்னுள்ளே, என் ராசாவின் மனசிலே படத்தில் குயில் பாட்டு, சின்னத்தம்பி படத்தில் போவோமா ஊர்கோலம், கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டமா தேரோட்டமா என இளையராஜா இசையில் மெலோடியும் குத்து பாடலும் பாடினார். அதனைப் போல ஏ ஆர் ரகுமான் இசையிலும் பல திரைப்படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இறுதியாக பீமா படத்தில் இடம் பிடித்திருக்கும் ரங்கு ரங்கம்மா பாடலை பாடியிருந்தார். தமிழ் தவிர தெலுங்கு மற்றும் மலையாளம் என பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை சுவர்ணலதா பாடியுள்ளார்.
கருத்தம்மா படத்தில் இடம் பிடித்த போராளே பொன்னுத்தாயி பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகி தேசிய விருது வென்று இந்த விருதை வென்ற முதல் பெண் பாடகி என்ற பெருமையும் பெற்றார். தேசிய விருது பெறும்போது இவருக்கு 21 வயது தான். தமிழ்நாடு அரசின் விருது மற்றும் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரியாக திகழ்ந்த ஸ்வர்ணலதாவுக்கு திருமண ஏற்பாடுகளை செய்யும்போது தனது பாடல்கள் பாடுவதற்கு ஏதாவது தடை ஏற்படுமா என்ற பயத்தில் தனக்கே திருமணமே வேண்டாம் என்று விட்டார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் ஸ்வர்ணலதாவுக்கு நுரையீரலில் ஒரு பிரச்சனை ஏற்பட மூச்சுக் கூட விட முடியாத சூழலில் மூச்சை பிடித்துக் கொண்டு பாடி வந்தார்.
பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று யாராலயும் முடியாது என்று கூற ஒரு கட்டத்தில் பல பாடல்களை பாடி ரசிகர்களை ரசிக்க வைத்த ஸ்வர்ணலதாவுக்கு பேச்சு கூட வரவில்லை. தன்னால் இறுதிக்காலத்தில் பேச முடியவில்லை என்பதைவிட பாடல்களை பாட முடியவில்லை என்ற சோகத்தில் உடல் நல குறைவால் 37 வயதில் காலமானார். அவர் மறைந்தாலும் தனது பாடல்கள் மூலம் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். தன்னுடைய இதமான குரலால் இதயத்தில் நுழைந்து மக்களை மகிழ்வித்து வரும் சுவர்ணலதாவுக்கு இன்று 52 ஆவது பிறந்தநாள்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…