தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான முரளி நடிப்பில் வெளியான இதயம் திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஹீரா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் அஜித்தை உயிருக்கு உயிராக காதலித்த நிலையில் அந்த காதல் கை கூடாததால் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டதாக பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நடிகை ஹீராவின் தந்தை ஒரு ராணுவ அதிகாரியாக இருந்த காரணத்தால் அவர் சிறுவயதில் இருந்தே ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறார்.
சென்னையில் கல்லூரி படிப்பை முடித்த ஹீரா, பிறகு மாடலின் மீது ஆர்வம் இருந்ததால் மாடலிங் செய்தார். முதலில் இவருக்கு ஹிந்தியில் நடிக்கும் வாய்ப்பு வர அதனை மறுத்துவிட்ட நிலையில் 1991 ஆம் ஆண்டு கதிர் இதயம் திரைப்படத்தின் கதையை கூற தயாரிப்பாளரும் கதையை கூறிய நிலையில் ஹீராவிற்கு கதை பிடித்து போக இதயம் திரைப்படத்தில் நடித்தார். அந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. தமிழைத் தொடர்ந்து பல மொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 49க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த இதயம், நீ பாதி நான் பாதி, சதிலீலாவதி மற்றும் அவ்வை சண்முகி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
1984 தொடங்கி 1999 ஆம் ஆண்டு வரை திரை உலகில் ஆக்டிவாக இருந்த இவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். அஜித்தும் இவரும் ஒரு திரைப்படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அப்போது காதலில் விழுந்த இவர்கள் தொடர்ந்து சில வருடங்கள் டேட்டிங் செய்ததாகவும் சில மாதங்கள் லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் அப்போது கிசுகிசுக்கப்பட்டது. அதன் பிறகு சில காரணங்களால் இருவரும் பிரிந்த நிலையில் அஜித் அதன் பிறகு தான் ஷாலினியை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஹீரோ என்ன ஆனார் என்று யாருக்குமே தெரியவில்லை.
இப்படியான நிலையில் நேற்று அஜித்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்ட நிலையில் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பும் விதமாக ஹீரா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், ஒரு நடிகர் என்னை ஏமாற்றியது மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களுடன் சேர்ந்து எனது ஆளுமையையும் சேதப்படுத்தினார். அவரால் நான் நிறைய அவமானங்களையும் பல சிரமங்களையும் சந்திக்க வேண்டி இருந்தது. அவர் ஒரு முறை தனது முதுகெலும்பில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார். அந்த நேரத்தில் நான் அவருடன் தங்கி அவருக்காக பல விஷயங்களை செய்தேன்.
ஆனால் அவர் தனது உடல்நிலை குறித்தும் பொய் சொன்னார் என்பதை நான் பிறகு தான் அறிந்து கொண்டேன். அந்த நடிகர் தன்னிடம் திருமணம் பற்றி என்ன சொன்னார் என்பதையும் குறிப்பிட்டு, நான் வேலைக்காரி போல தோற்றமளிக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறினார். பிறகு யாரும் அவளை பார்க்க மாட்டார்கள். ஆனால் நான் விரும்பும் பெண்ணுடன் உடலுறவு கொள்வேன் என்று நடிகர் ஹீராவிடம் கூறியதாக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பெயரை குறிப்பிடாமல் நடிகை ஹீரா சொல்லும் அந்த நடிகர் அஜித்தா என்ற கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களில் கிளம்பியுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…