#image_title
லட்சுமி ராமகிருஷ்ணன் கேரளாவில் பாலக்காட்டில் தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். 16 வயதில் நிச்சயதார்த்தம் செய்து 18 வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர் லஷ்மி ராமகிருஷ்ணன். இவர் தென்னிந்திய நடிகை மற்றும் இயக்குனர் ஆவார். அவர் 2006 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் அறிமுகமாகி தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.
மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமான பின்னர் தமிழ் திரைப்படங்களுக்கு வந்த லட்சுமி ராமகிருஷ்ணன் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். 2008 ஆம் ஆண்டு கரு பழனியப்பனின் ‘பிரிவோம் சந்திப்போம்’ திரைப்படத்தில் நாயகியான சினேகாவின் அம்மாவாக நடித்தார். இதுவே அவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் ஆகும். 2012 ஆம் ஆண்டு ‘ஆரோகணம்’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக ஆனார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இது தவிர சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 1500 எபிசோடுகளுக்கு மேல் நடத்தியுள்ளார். இது தவிர 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
நடிகை ஜோதிகா மும்பையை பூர்வீகமாகக் கொண்ட தென்னிந்திய நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஜோதிகா 2006 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து இடைவேளை எடுத்துக் கொண்ட ஜோதிகா நீண்ட இடைவேளைக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு 36 வயதிலேயே திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அதற்கு பிறகு பெண்களை முன்னிலை படுத்தும் படங்களிலும் இந்தி திரையுலகிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
படங்களில் மட்டுமல்லாது பிட்னஸிலும் உடற்பயிற்சியிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பவர் ஜோதிகா. அவ்வப்போது அவரது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் படு பயங்கரமாக ஒர்க் அவுட் செய்யும் படங்களும் வீடியோக்களும் வெளிவரும். 40 வயதை கடந்து விட்ட ஜோதிகா பிட்னஸில் செய்யும் உடற்பயிற்சிகள் அனைவரையும் ஆச்சரியமடைய செய்யும். அதை பற்றி தான் தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பதிவிட்டு என்னவென்றால், ஜோதிகா, நீங்கள் 40 வயதை கடந்த பின்பும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும், உங்களது பிட்னஸில் ஆர்வத்தை பார்க்கும்போது மிகுந்த வியப்பையும் ஆச்சரியத்தையும் நான் அடைந்தேன். இன்னும் நீங்கள் மேன்மேலும் உயர்ந்து செல்ல வேண்டும். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருந்தார்.
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…
ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…
கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…
பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…
ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…