“எங்க கூடவும் கொஞ்ச நேரம் வந்துட்டு போ”… கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த வீடியோ… வசமாக சிக்கிய இளம்பெண்… இறுதியில் நடந்த பயங்கரம்…!

By Nanthini on ஐப்பசி 24, 2025

Spread the love

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் சக்திவேல் (32) என்பவர் ஆலங்குளத்தில் உள்ள ஒரு டிராக்டர் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஆலங்குளம் அருகே உள்ள மருதம் புத்துரை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது. இதனிடையே அந்த பெண்ணிடம் பழக்கத்தை தொடர்ந்து வந்த சக்திவேல் அடிக்கடி அந்த பெண்ணின் ஊருக்கு சென்று நேரில் சந்தித்துள்ளார். பிறகு அவரிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்துள்ளார். இப்படி அடிக்கடி அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்த சக்திவேல் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்ததை தன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இளம் பெண்ணின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் அவருடைய உறவினர்கள் அவரை கண்டித்தனர். இதனிடையே இளம் பெண் சக்திவேலுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் தான் கேட்கும் நேரத்தில் தனக்கு பணம் தர வேண்டும் என்று கூறி நான்கு லட்சம் ரூபாய் வரை அந்த பெண்ணிடம் இருந்து பணம் பறித்துள்ளார். சமீபத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்ட நிலையில் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். உடனே அந்தரங்க வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று சக்திவேல் கூறியதால் வேறு வழியில்லாமல் அந்த பெண் தன் பெற்றோரிடம் சக்திவேல் மிரட்டுவதாக கூறியுள்ளார்.

   

இதனைத் தொடர்ந்து அவருடைய பெற்றோர் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீஸ் ஆர் சக்திவேலை பிடித்து கண்டித்ததோடு அவரிடமிருந்து அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அளித்துள்ளனர். இதனால் போலீசில் மாட்டி விட்டதால் ஆத்திரமடைந்த சக்திவேல் தன் மனைவியின் செல்போனில் அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்த வீடியோக்களை ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளார். தனது செல்போனில் போலீசார் வீடியோக்களை அழித்ததால் ஆலங்குளத்தில் தான் வேலை பார்க்கும் ஒர்க் ஷாப்க்கு டிராக்டர் கொண்டு வரும் மருதம் புத்துரை சேர்ந்த முத்துராஜ் என்பவரிடம் தன் மனைவியின் செல்போனில் இருந்த இளம் பெண்ணின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

   

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட முத்துராஜ் இதற்காக தனது நண்பரான முருகேசன் (42) என்பவரையும் சேர்த்துக்கொண்டு சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை தங்களுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் எனவும் இல்லை என்றால் வீடியோவை வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளனர். ஏற்கனவே சக்திவேலால் தன்னுடைய வாழ்க்கையை இழந்த அந்த இளம் பெண் மேலும் இருவர் சேர்ந்து வீடியோவை வைத்துக்கொண்டு தன்னை மிரட்டியதை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த இளம் பெண் வேறு வழியில்லாமல் தன்னுடைய பாட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

 

உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்தப் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு சக்திவேல், முத்துராஜ் மற்றும் முருகேசன் ஆகியோர்தான் காரணம் என்றும் எவ்வளவு பணத்தை இழந்துள்ளார் என்பது குறித்தும் என்னவெல்லாம் துன்புறுத்தினார்கள் என்பது பற்றியும் எழுதி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.