78,000 கோடி எங்கே போனது…? முதல்வரிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் அண்ணாமலை…!!

By Soundarya on ஐப்பசி 24, 2025

Spread the love

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தமிழக கர்நாடக எல்லையான அங்கு குட்டையூர், மட்டிமரத்தள்ளி  உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு நேரடியாக செல்ல பாதை கிடையாது. வனப்பகுதி பகுதிக்கு மத்தியில் கர்கேண்டி நீரோடை பள்ளம் வழியாக இருபது கிலோ மீட்டர் பயணித்து அந்த கிராமங்களுக்கு செல்ல முடியும். கனமழையின் காரணமாக அங்கு காட்டாறு ஓடுவதால் பொதுமக்கள் முடங்கி கிடக்கிறார்கள்.

இங்கு உயர்மட்ட பாலம் அமைக்குமாறு பல வருடங்களாக மக்கள் கோரிக்கை வைத்தும் திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சாலைகள் அமைக்க பாலங்கள் கட்ட 78,000 கோடி ரூபாய் செலவிட்டதாக பட்ஜெட் அறிக்கையில் கூறுகிறது. ஆனால் பல கிராமங்களில் இன்னும் சாலை வசதி வரவில்லை. நிதியும் எங்கு செல்கிறது?என்று தெரியவில்லை. சாலைகள் அமைத்ததாக கணக்கு காட்டி 78 ஆயிரம் கோடி ரூபாய் எங்கு சென்றது என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.