இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விஜய். இதெல்லாம் ஒரு மூஞ்சியா என இவரை கலாய்த்தனர். ஆனால் தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் விஜய். ஆரம்பத்தில் குடும்ப படங்களில் சாப்டாக நடித்து வந்த விஜய் அதன் பின் ஆக்சன் படங்களில் நடித்து இளையதளபதி விஜயாக மாறினார். கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி என நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார்.

Vijay announced his political party
அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய படங்களில் அரசியல் பேச ஆரம்பித்த விஜய், தளபதியாக விஜயாக மாறினார். படங்களில் வசனமாக மட்டும் இல்லாமல் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியிலும் குட்டி கதை சொல்லி தன அரசியல் வருகைக்கு தன் ரசிகர்களை தயார்படுத்தினார். இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் என தன் கட்சியின் பெயரை பதிவு செய்த விஜய், அடுத்த ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

Vijay to quit cinema
இப்போது கோட் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து ஒரே ஒரு படத்தில் நடித்து முடித்து சினிமாவை விட்டு விலக போவதாக இருக்கிறார். அந்தப்படத்தின் இயக்குனர் யாராக இருக்கும் என பெரிய பேச்சே போய் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அவரின் அரசியல் வருகைக்கு இன்னும் வைரலாக்கும் விதமாக பெண் சாமியார் ஒருவர், விஜய் எம்.ஜி.ஆர் போல் வருவார் என்றும், ஒரு பெண் ஆத்மா அவருடன் உள்ளது என கூறியும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Lady samiyar about vijay politics
அந்த பெண் சாமியார் கூறியதாவது, விஜய் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு வந்தபோது தான் நான் கவனித்தேன் அவருடன் ஒரு ஆத்மா உள்ளது. விஜய்யை பின்தொடர்ந்து ஒரு பெண் ஆத்மா வந்தது, அது அவருடனே தான் இருக்கிறது. அதுமட்டுமல்ல விஜய் அரசியலில் எம்.ஜி.ஆர் போல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது, ஆனால் அவர் நான் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும், எனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம் ஆனால் நான் சொல்வதை கேட்டால் அவருக்கு வெற்றி நிச்சயம் என்கிறார் அந்த பெண் சாமியார். இவரின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது
