ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டி பகுதியில் சேர்ந்தவர் நடராஜ். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நட்ராஜ் பெருந்துறையில் இருந்து ஈரோடு செல்லும் அரசு பவுன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் பேருந்து வண்ணங்காட்டு வலசு பகுதி அருகே சென்றபோது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த நடராஜ் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நடராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
