ரஜினியின் சம்பளத்தை கூட தொடாது போல… லைகா தலையில் துண்டை போட்ட ‘லால் சலாம்’… முதல் நாள் வசூல்….

By Begam

Published on:

லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோவாக அசத்தியுள்ளார். ‘மும்பை ரிட்டர்ன்ஸ்’ கேங்ஸ்டர் மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினி நடித்துள்ளதால், இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று வெளியான இத்திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றது.

   

இத்திரைப்படத்தின் மையக்கதையானது, இரண்டு ஊர்கள், இருவேறு மதத்தினர் அடங்கிய இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் மேட்ச்சில் மோதல் வெடிக்க, அது பெரும் கலவரமாக உருவெடுக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக இவர்களுக்குள் சண்டை மூட்டி ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கின்றனர் அரசியல்வாதிகள்.

இந்த யுத்தம் இரண்டு கிராமங்களையும் அதிலிருக்கும் மனிதர்களையும் என்னவெல்லாம் செய்தது, அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதைப் பற்றி கூறுகிறது மீதி கதை. காதல், ஆக்ரோஷம், குற்றவுணர்வு என தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவரைப்போல நடிகர் விக்ராந்திற்கும்  இன்னும் அழுத்தமான காட்சிகளைக் கொடுத்திருக்கலாம். ஆனாலும், நடிப்பில் அவர் குறை வைக்கவில்லை.

தற்பொழுது  ‘லால் ஸலாம்’ திரைப்படத்தின் முதல் நாள் கலெக்ஷன் தான் இணையத்தில்  வெளியாகி உள்ளது. அதன்படி ‘லால் சலாம்’ படத்தில் ஒரு வாரம் நடித்ததற்கு சூப்பர் ஸ்டாருக்கு 40 கோடி சம்பளமாக வழங்கியுள்ளது லைகா நிறுவனம். ஆனால்  லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல் வெறும் 4 கோடி ரூபாய் மட்டும் தானாம். போக போக வசூல் சூடுபிடிக்குமா..? இல்லை தயாரிப்பாளர் தலையில் துண்டு தானா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.