Connect with us

அப்பாவால முடியலன்னு மகளை களம் இறக்குறாங்களா.. ஐஸ்வர்யாவின் புகைப்படத்தோட கொடியை கட்டிய ரஜினி ரசிகர்கள்.. பின்னணி என்ன..

CINEMA

அப்பாவால முடியலன்னு மகளை களம் இறக்குறாங்களா.. ஐஸ்வர்யாவின் புகைப்படத்தோட கொடியை கட்டிய ரஜினி ரசிகர்கள்.. பின்னணி என்ன..

தமிழ்நாட்டின் திரையுலகச் செல்லப் பிள்ளையான சூப்பர் ஸ்டார் அவர்களின் நடித்து வெளியான லால் சலாம் படம் கலவையான விமர்சனம் பெற்று இருந்தாலும் அது திரைக்கு வந்த முதல் நாளிலேயே பலரையும் கவர்ந்து திரையரங்கிற்கு கூட்டங்களை அள்ளிச் சென்றது. தற்போது இப்படத்தில் ரஜினிகாந்தின் கேரக்டரும் சரி படத்தின் கதை கருத்தும் மிக சிறப்பாக அமைந்துள்ளது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் லால் சலாம். இத்திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி இணையத்தை சக்க போடு போட்டது. அதில், விளையாட்டில் மதத்தை கலந்திருக்கீங்க என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற படம் கூடவே ரஜினியின் கௌரவ தோற்றத்தில் அப்படத்தில் அவர் வருவதால் ரசிகர்கள் அனைவரும் படத்தை திரையரங்கிற்கு வரவழைத்தது.

இந்த படத்தில், இஸ்லாமியர்கள் பெரும்பானமையாக வாழும் முரார்பாத் கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் மாமா, மாப்பிள்ளை பழகி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதில் மும்பைக்கு சென்று அங்கு பெரிய தொழிலதிபராக மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் (ரஜினிகாந்த்) நடித்துள்ளார். அவரது மகனான விக்ராந்த்தும், மொய்தீன் பாயின் நெருங்கிய நண்பரின் மகனாக விஷ்ணு விஷால் உள்ளார்.கிரிக்கெட் போட்டியில் ஏற்படும் சிறு மோதல், பெரிய கலவரமாக வெடித்து அது இந்து, முஸ்லிம் கலவரமாக மாறி இருவருக்கும் பிரிவை ஏற்டுத்தி விடுகிறது. இதனைத் தொடர்ந்து கிராமத்தில் தேர்த் திருவிழா நடத்த இந்து மக்கள் முடிவு செய்யும்போது ஓர் அரசியல் கட்சியின் சதியால் திருவிழா தடுக்கப்படுகிறது. இறுதியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமை நிலவியதா, தேர்த் திருவிழா நடந்ததா என்பது தான் லால் சலாம் படத்தின் கதை.

   

 

ரசிகர்கள் அனைவரும் ரஜினிகாந்த் மூலம் இப்படிப்பட்ட பொக்கிஷமான ஒரு கரு கதை கலந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்ததற்காக, ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை திருச்சி ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் அறிமுகப்படுத்தி உள்ளது. கொடியை அறிமுகப்படுத்தி பேசிய நற்பணி மற்ற உறுப்பினர் ஒருவர், இன்று வெளியாகி உள்ள லால் சலாம் படம், மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகின்ற. இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு சிறந்த படம். இந்த படம் விருதை வாங்கும் படமாக மட்டும் இல்லாமல், மக்களின் மனதை வெகுவாக கவரக்கூடிய வகையில் அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

இந்த படத்தை இயக்கிய தலைவரின் மகள் ஐஸ்வர்யா அவர்கள் இன்னும் பல சிறப்பான பல படங்களை இயக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும்,ஐஸ்வர்யா லால் சலாம் படத்தில் புரட்சிகரமான கருத்தை வைத்து இருக்கிறார் என்பதற்காக கொடியில் சிவப்பும், மிதமான முறையில் படத்தின் கதையை கொண்டு சொன்றதால், மஞ்சலும், அவர் என்றைக்கும் வெற்றி அடைய வேண்டும் என்பதால் அவரின் உருவத்தை பச்சையில் பொறுத்து இருப்பதாகவும். இந்த படம் வெற்றி அடைய எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top