தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்த 40 ஆண்டுகளில் ரஜினி பல ஹீரோயின்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் ஒருசிலரோடுதான் அவருக்கு ஜோடிப் பொருத்தம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். ஸ்ரீதேவி, குஷ்பு, மீனா, நக்மா, சௌந்தர்யா என சிலரை சொல்லலாம். அதிலும் குஷ்புவோடு அவர் இணைந்து நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட்டடித்தன.
குஷ்பு தமிழில் அறிமுகமானதே ரஜினி நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில்தான். அந்த படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார். ரஜினியோடு சில காம்பினேஷன் காட்சிகளும் அந்த படத்தில் அவருக்கு அமைந்தன.
இந்நிலையில் திடீரென்று ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்பு ரஜினியைப் பார்த்து ‘வாடா’ என்று சொல்லியுள்ளார். இதைக் கேட்ட அனைவரும் ஷாக் ஆகியுள்ளனர். ஆனால் அதற்கு ரஜினி ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டாராம். பின்னர் பிரபு, குஷ்புவை அழைத்து ‘ஏன் ரஜினி சாரை மரியாதை இல்லாமல் பேசினாய்’ எனக் கேட்டுள்ளார். அதற்கு குஷ்பு நான் அவருக்கு ‘குட்மார்னிங்க்தானே சொன்னேன்’ என அப்பாவியாக கூறியுள்ளார்.
நடிக்க வந்த புதியில் இவருக்கு ஹிந்தியும், ஆங்கிலமும் மட்டுமே தெரியும். அப்போது யாரோ ஒருவர் ‘உனக்கு தமிழ் சொல்லி கொடுக்கிறேன்’ என சொல்லி குட்மார்னிங் என்றால் தமிழில் வாடா என்று சொல்லவேண்டும் எனக் கூறி குழப்பியுள்ளனர். அதைக் கேட்டுதன் ரஜினிக்குகு வணக்கம் சொல்வதாக நினைத்து ‘வாடா’ என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்ட பிரபு ரஜினியிடம் சென்று நடந்ததைக் கூறியிருக்கிறார். விஷயத்தை புரிந்துகொண்ட ரஜினி குஷ்புவின் மேல் கோபம் கொள்ளவில்லையாம். அதன் பிறகுதான் ரஜினி குஷ்பு ஜோடி பாண்டியன், மன்னன், அண்ணாமலை போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
