BREAKING: கள்ள காதலுக்கு இடையூறு.. 2 குழந்தைகளை கொடூரமாக கொன்ற அபிராமி குற்றவாளி என தீர்ப்பு..!

Spread the love

குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் விஜய் என்ற தனியார் வங்கி ஊழியர் வசித்து வந்த நிலையில் இவருக்கு அபிராமி என்ற மனைவியும் அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு அந்த பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றிய சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவரான விஜய்க்கு தெரிய வர அவர் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அபிராமி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து இதற்கு தடையாக இருந்த கணவன் மற்றும் குழந்தைகளை கொல்ல முடிவு செய்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொல்ல முயற்சித்த நிலையில் அதிர்ஷ்டவசமாக விஜய் உயிர் தப்பினார். ஆனால் இரண்டு குழந்தைகளும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அபிராமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து இன்னும் சற்று நேரத்தில் தண்டனை விவரம் வெளியாகிறது.

Nanthini

Recent Posts

கோவை விபத்து… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி… ரூ.12 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதல்வர் விஜய்…!

கோயம்புத்தூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு…

4 minutes ago

எடப்பாடிக்கு ‘விப்’.. வேலுமணிக்கு ‘எம்.எல்.ஏ-க்கள்’!… சபாநாயகரின் அதிரடி முடிவு என்ன?… சட்ட நிபுணர்கள் சொல்லும் அந்த ஒரு ட்விஸ்ட்… நிலைகுலைந்த எடப்பாடி அணி…!!!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களை மட்டும் பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்துள்ள நிலையில், அக்கட்சியில்…

7 minutes ago

“உதயநிதி vs விஜய்”… முதல் நாளிலேயே மோதல்… சட்டசபையை அதிரவைத்த அந்த ஒரு வார்த்தை…!

தமிழக சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவராகத் தனது கன்னிப் பேச்சைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், ஆளும் தரப்பிற்கு வாழ்த்துக்களைக் கூறிய…

9 minutes ago

BREAKING: SP வேலுமணி, CV சண்முகத்தை சந்திக்கும் CM விஜய்… அதிர்ச்சியில் எடப்பாடி… தமிழக அரசியலில் அடுத்த ‘டுவிஸ்ட்’…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், அதிமுகவின் மூத்த தலைவர்களான…

15 minutes ago

“திமுகவுடன் கூட்டணி பேசினார் எடப்பாடி!”… ஆனா நாங்க ஒத்துக்கல… உண்மையை போட்டு உடைத்த சி.வி. சண்முகம்…!!!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் போர்க்கொடி…

20 minutes ago

“தமிழக சட்டசபையில் யாரும் எதிர்பார்க்காத அந்த ஒரு நிமிடம்”… ஒரேநாளில் கவனம் பெற்ற எம்எல்ஏ பல்லவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!

தமிழக சட்டசபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இது வெறும் சடங்காக மட்டுமில்லாமல், அரசியல் களம் தாண்டிய…

20 minutes ago