குண்டான் சட்டி என்ற அனிமேஷன் திரைப்படத்தை இயக்கி 12 வயது சிறுமி சாதனை படைத்திருக்கின்றார். ஓராண்டு மட்டும் ஆன்லைன் மூலமாக அனிமேஷன் பயிற்சி பெற்ற ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி பிகே அகஸ்தி துணிச்சலாக தனியாலாக குண்டான் சட்டி என்ற 2-ம் மணிநேர அனிமேஷன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இவரின் சாதனை தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உன் உலக சினிமாவில் உள்ள அனைத்து ஜாம்பவான்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பள்ளிக்குச் சென்ற பிறகு சிறுவர், சிறுமியர்கள் டிவியில் படம் பார்த்து ரசிப்பது அல்லது செல்போனை நோண்டுவது, விளையாடுவது என இருக்க கூடிய இந்த காலத்தில் கொரோனா பேரிடர் சமயத்தில் பள்ளிக்கு விடுமுறை விட்டபோது சில ஆன்லைன் வகுப்புகளை கற்று வந்திருக்கிறார் பிகே அகஸ்தி.
இவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர்கள் கார்த்திகேயன்- பூர்ணிமா. இவரின் இளைய மகளான 12 வயதான அகஸ்தி தான் இந்த சாதனையை செய்திருக்கின்றார். இவர் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி பல கோப்பைகளை வென்றுள்ளார்.
கொரோனா பேரிடர் காலத்தில் அதிக புத்தகங்களை படிப்பது, பின்னர் கார்ட்டூன் குறித்த அனிமேஷன் புத்தகங்கள் என தொடர்ந்து அதையே படித்து வந்திருக்கின்றார், இதையடுத்து தான் படித்த கார்ட்டூன் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை புத்தகமாக எழுத தொடங்கி இருக்கிறார். தற்போது அனைத்தும் டிஜிட்டல் மாயமாகி இருக்கக்கூடிய காலத்தினால் அந்த கதையை ஒரு அனிமேஷன் திரைப்படமாக எடுத்திருக்கின்றார்.
அதற்கு குண்டான் சட்டி என்ற வித்தியாசமான பெயர் சூட்டி அதனை வெளியிட்டு இருக்கிறார். இந்து திரைப்படத்தை அவரது தந்தை கார்த்திகேயன் தயாரித்திருந்தார். தமிழ் திரை உலகில் இந்த திரைப்படத்தின் மூலமாக 12 வயது பள்ளி மாணவி ஒரு இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய சினிமா வரலாற்றில் மட்டும் இன்றி சர்வதேச அளவில் சாதனை படைத்திருக்கின்றார் அகஸ்தி.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயம் குறித்த வழக்கில்,…
400 கோடி ரூபாய் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை புழல் மத்திய சிறையில்…
அதிமுகவில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் மற்றும் கூட்டுத் தலைமை கோரிக்கைகள் தமிழக அரசியலில் பெரும்…
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டம், துல்ஜாபூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ துல்ஜா பவானி அம்மன் ஆலயத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள திட்டங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் தினசரி சந்தையில் காளிராஜ் என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாகப்…
பொதுவாகப் பயிர்கள் செழித்து வளரும் விவசாய நிலங்களில் மனிதர்களின் கண் திருஷ்டி படாமல் இருப்பதற்காக சோளக்காட்டு பொம்மைகள், பழைய காலணிகள்…