நடிகர் குணால் மறைவால் கைது செய்யப்பட்ட நடிகை – 36 வயதில் வாழ்க்கையை முடித்து கொண்டது ஏன்.? வெளிச்சத்துக்கு வராத உண்மைகள்

By Sumathi

Updated on:

காதலர் தினம், பார்வை ஒன்றே போதுமே, வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் குணால். இவரது முழுப் பெயர் குணால் சிங் ஜாம்லால். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், கடந்த 2008ம் ஆணடு பிப்ரவரி மாதம் 7ம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் வோக்ட்வாலா என்ற பகுதியில், அபார்ட்மென்ட் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் பரவியது.

36 வயதில் அவர் தற்கொலை செய்து கொண்டது சினிமா வட்டாரத்தில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. குணாலுடன் பார்வை ஒன்றே போதுமே படத்தில் நடித்த மோனல், (இவர் நடிகை சிம்ரனின் சகோதரி) அவருக்கு ஏற்பட்ட பிரச்னையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் கூடுதல் தகவலாக குறிப்பிடத்தக்கது.

   

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி கிடைக்காததால், இந்தியில் சுதேஷ் இன்ஸ்டிடியூட் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் அசிஸ்டென்ட் எடிட்டர் மற்றும் புரடியூசராக சில படங்களில் பணிபுரிகிறார் குணால். அப்போது ஒரு புதுபடத்தில் நடிக்கவும், அதில் கோ புரடியூசராகவும் செயல்படும் குணால், அந்த படத்தின் நாயகியாக அறிமுகமாகும் புதுமுக நடிகை நவீனா பங்கஜ் பாட்டியா என்பவருக்கு நடிப்பு சொல்லித் தருகிறார்.

இதற்காக அவர் தங்கியிருக்கும் அறைக்கு செல்கிறார். தினமும் அங்கு சென்று நடிப்பு பயிற்சி அளித்த வகையில், அவர்களுக்குள் ஏற்படும் நட்பு காதலாகிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்கிறது. இதுகுறித்து தெரிய வந்த நிலையில், குணாலின் மனைவி அனுராதா கண்டித்து, அறிவுரை சொல்கிறார். ஆனால் அதை ஏற்க மறுத்த குணால், தொடர்ந்து நவீனா பங்கஜ் பாட்டியாவுடன் நட்பை தொடர்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஒருநாள், நவீனா பங்கஜ் பாட்டியாவை சந்திக்க அவர் தங்கியிருக்கும் அபார்ட்மெண்டுக்கு வருகிறார். அப்போது இருவருக்கும் பலத்த வாக்குவாதம், சண்டை ஏற்படுகிறது. அப்போது அழுதபடி, அந்த பெண் பாத்ரூமுக்குள் சென்று கதவை மூடிக்கொள்கிறார். பிறகு கதவை திறந்து வந்து அவர் பார்த்த போது, வெளியறையில் ஒரு பேனில், துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கியபடி குணால் இறந்திருக்கிறார். போலீசார் வந்து உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

குணால் உடலில் சில மர்ம காயங்கள் இருந்ததால், இதுபற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கிறார் குணாலின் தந்தை ராஜேந்திர சிங். இதையடுத்து அந்த பெண் நவீனா பங்கஜ் பாட்டியாலாவை போலீசார் கைது செய்து, 4 மாதங்கள் அவர் சிறையில் இருக்கிறார். போலீசார் விசாரணையில் அவர் குற்றமற்றவர் என விடுதலை செய்கின்றனர். ஆனால், 15 ஆண்டுகளாகியும் இதுவரை நடிகர் குணால் தற்கொலை வழக்கில் மர்மம் நீடிப்பதாகவே சினிமாத்துறையில் பேசப்பட்டு வருகிறது.

author avatar
Sumathi