Categories: சினிமா

கும்கி படத்துக்கு மொத்தம் 8 க்ளைமேக்ஸ் இருந்தது… என் பையன கொன்னுடாதீங்க என அழுத பிரபு- பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விப் படங்கள் கொடுத்தாலே அந்த இயக்குனரை ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் இயக்குனர் பிரபு சாலமன் தனது தொடக்கக் கால படங்கள் அனைத்திலும் தோல்வி கண்டார். ஆனாலும் அந்த வெற்றியில் இருந்து மீண்டும் அவர் கம்பேக் கொடுத்த படம்தான் மைனா.

அவர் இயக்கத்தி 2010 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான மைனா திரைப்படம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. அந்த ஒரே படத்தால் அவர் கவனிக்கப்படும் முன்னணி இயக்குனர் ஆனார். அதன் பின்னர் அவர் இயக்கிய திரைப்படம்தான் கும்கி.

இந்த திரைப்படத்தில் பிரபுவின் மகனான விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஆகியோரை அறிமுகம் செய்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மலைவாழ் கிராமம் ஒன்றுக்கு கும்கி யானை தேவைப்பட, கோமாளி யானையை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் விக்ரம் பிரபு அந்த கிராமத்துக்குள் செல்கிறார்.

#image_title

அங்கு அவர் லட்சுமி மேனனைப் பார்த்து காதலில் விழ, அந்த ஊரை விட்டு செல்ல மனம் விரும்பவில்லை. அவரின் காதலை லட்சுமி மேனன் ஏற்றுக்கொண்டாரா? காட்டு யானையை விரட்ட அழைத்து வரப்பட்ட கோமாளி யானை என்ன ஆனது? அந்த ஊரின் கட்டுப்பாடு என்ன ஆனது என்பதை நகைச்சுவையாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் சொன்ன படம் கும்கி.

இந்த படம் பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய பாடல் ஆசிரியர் யுகபாரதி, “கும்கி படத்துக்கு மொத்தம் 8 விதமான க்ளைமேக்ஸை எடுத்து வைத்திருந்தார் இயக்குனர். அதில் ஒரு க்ளைமேக்ஸில் விக்ரம் பிரபு இறந்துவிடுவார். அதைதான் வைக்கலாம் என முடிவு செய்தார் இயக்குனர். ஆனால் படம் பார்த்த பிரபு ‘என் பையன் நடிக்குற முதல் படம் இது. அவனை கொன்னுடாதீங்க” என அழுதார். அதன் பிறகுதான் அவரை தவிர மற்ற எல்லோரும் சாவது போன்று எடுக்கப்பட்டிருந்த க்ளைமேக்ஸை வைத்தார்காள்.” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

8 மணத்தியாலங்கள் ago