தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் குபேரா. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, குபேரா படத்தில் தேவாவாக நடித்த தனுஷ் தேசிய விருதுக்கு தகுதியானவர்.
அந்தப் படத்தில் தேவாவாக நடிக்கும் துணிச்சல் தனுஷை தவிர வேறு எந்த ஒரு இந்திய நடிகர்களுக்கும் கிடையாது. ஏன் சொல்லப்போனால் அந்த தைரியம் எனக்கு கூட இல்லை. இதற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கவில்லை என்றால் விருதுகளுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். குபேரா படத்தில் தனுஷின் நடிப்பு என்னை மிகவும் சிந்திக்க வைத்தது என்று புகழாரம் பேசியுள்ளார்.
