தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி விண்ணப்பித்த நாளிலேயே உடனடி கடன்.. அரசு அதிரடி..!

By Nanthini on ஆனி 23, 2025

Spread the love

நாடு முழுவதும் விவசாயிகள் பயனடையும் விதமாக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் பி எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வரும் நிலையில் தமிழக அரசு தற்போது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

அதாவது விண்ணப்பித்த நாளிலேயே உடனடியாக விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான சாஃப்ட்வேரை கூட்டுறவுத்துறை உருவாக்கி வருவதாகவும், அந்த சாப்ட்வேர் தயாரானது முதல் கட்டமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 131 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல்படுத்த இருப்பதாகவும் பிறகு மாநில முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தமிழக விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.